இந்தியப் பெருநிலத்தில் இரண்டறக் கலந்திருக்கும் பேரிதிகாசமான மகாபாரதம், துணைக்கண்டம் முழுவதிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் காவியம், பாடல், நடனம், நாடகம், விவாதம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்வேறு வடிவங்களைப் பெற்று பல தலைமுறைகளை கடந்து வந்துள்ளது.